யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக ஒலிம்பிக்தின விழா
யாழ்குடா நாட்டில் முதன் முறையாக சர்வதேச ஒலிம்பிக்தின விழா 22-06-2010 புதன் கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.இந் நிகழ்வுக்கு தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பெர்ணாண்டோ அவர்கள் தலைமை தாங்கினார்.பிரதம விருந்தினராக இலங்கை விளையாட்டுதுறை அமைச்சர் சி.பி.ரத்னாயக்கா அவர்கள் கலந்து கொண்டார்.அத்துடன் இந் நிகழ்வுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஸ், யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோ.பற்குணராஜா,யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த கத்துறசிங்க,வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எஸ்.அண்ணாத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் மாணவ,மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.பின்பு தேசியக்கொடி,சர்வதேச ஒலிம்பிக்கொடி, வடமாகாணகொடி,யாழ் மாவட்டக்கொடி என்பன பிரதம விருந்தினர்,தேசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,யாழ் மாநகர சபை முதல்வர் ஆகியோரால் ஏற்றிவைக்கப்பட்டது.தொடர்ந்து பிரதம விருந்தினர் ஒலிம்பிக் தீபத்தை விளையாட்டு வீரர்களிடம் கையளித்து கொடியசைத்த பின்பு பாடசாலை மாணவிகளின் காட்சி சைக்கிளோட்ட நிகழ்வும்,மாணவர்களின் மரதனோட்ட நிகழ்வும் இடம்பெற்றது.
பின்னர் யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.தொடர்ந்து இலங்கை கைப்பந்தாட்ட அறிமுக போட்டி நடைபெற்றது.இராணுவ வீரர்களின் ரைக்கொன்டோ கராட்டி நிகழ்வுகள் இடம்பெற்று இராணுவ வீரர்களின் ஜிம்னாஸ்ரிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஓவிய,புதிர் போட்டிகள் என்பவற்றுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.பின்பு இசை நிகழ்சியும் இடம்பெற்றது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக